தனிமையில் இருந்த பெண்ணிடம் அத்துமீற முற்பட்ட திருமண தரகர்: காத்தான்குடியில் சம்பவம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவு பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையை அத்துமீறி பிடித்த திருமணத் தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை எதிர்வரும் 12ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை(25) உத்தரவிட்டுள்ளார்.
இந்த திருமணத் தரகர் குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், அதே பகுதியில் வசிக்கும் பெண்ணொருவருக்கும் ஆணொருவருக்கும் திருமணம் பேசி முடித்து விட்டு இரு வீட்டாரிடமும் இருந்து தரகுப் பணத்தை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் திருமணம் செய்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பின்னர், அவரது மனைவி வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டின் வாசல் கதவை திறந்து சட்டவிரோதமாக உட்சென்று வாசல் கதவில் அவரது தொலைபேசி இலக்கத்தை பொறித்துவிட்டு சென்றுள்ளார்.
தரகர் கைது
திருமணத் தரகரின் செயற்பாடு தொடர்பாக கணவனிடம் மனைவி தெரிவித்ததையடுத்து, அவரை கணவர் தொலைபேசி ஊடாக எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ தினமான வியாழக்கிழமை குறித்த வீட்டிற்குள் நுழைந்த தரகர் தனிமையில் இருந்த பெண்ணின் கையை அத்துமீறி பிடித்துள்ளார்.
பின்னர், அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடி வீட்டை விட்டு வெளியேறிய பெண், அயலவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய தரகர் கைது செய்யப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
