உங்கள் ஊரிலேயே கல்விக் கனவுகளை நனவாக்க ஓர் அரிய வாய்ப்பு
இந்த பூமி பந்தின் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம்.
கலை, இலக்கியம், கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் என பரந்து விரிந்த பல்வேறு துறைகளில் மானிட சமூகம் நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை, முன்னேற்றத்தை பதிவு செய்து வருகின்றது என்றால் அது மிகப்படாது.
கல்வி என்னும் ஆயுதம் இந்த உலகின் மிகப்பெரிய ஆயுதமாகவே கருதப்படுகின்றது. ஒரு சமூகத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் நிர்ணயம் செய்யும் பிரதான ஏதுவாக கல்வியே காணப்படுகின்றது.
உலகின் பல்வேறு நாடுகளை நாம் அவதானித்து பார்த்தால் இந்த நிதர்சனம் எமக்கு புலனாகும். உதாரணமாக பெரிய அளவில் வளங்கள் இல்லாத இஸ்ரேல் நாடு மனித மூளையின் திறன் விருத்தியினால் உலகின் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடுக்க கூடிய நிலையை உருவாக்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப கல்வி
அதற்கு பிரதான ஏதுவாக அங்கு வாழும் மக்களின் தொழில்நுட்ப அறிவாற்றலை கோடிட்டு கூற முடியும். அந்த வகையில் இலங்கைத் திருநாட்டில் இளம் சமூகத்தினர் கல்வி வளர்ச்சியில் எட்டும் ஒவ்வொரு வெற்றியும் தாய் திருநாட்டின் வளர்ச்சியையும், முயற்சியையும் உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.
இலங்கையில் கல்வி புலம் என்பது ஒரு சில நகரங்களையும் மட்டும் மையப்படுத்தியதாகவே இன்றளவிலும் காணப்படுகின்றது.
குறிப்பாக கொழும்பு, கம்பஹா, கண்டி போன்ற பெரு நகரங்களுக்கு உயர்கல்வி அல்லது தொழில்சார் கல்வி வரையறுக்கப்பட்டுள்ளது என்றால் அது பிழையாகாது. எனினும் தற்பொழுது வடக்கில் நோர்தன் யுனிவர்சிட்டி அல்லது வடக்கு பல்கலைக்கழகம் வீறு நடை போட்டு வளர்ச்சியில் பல்வேறு அடைவுகளை எட்டி வருகின்றது.
உலகின் முதல் நிலை தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றான SLITT எனப்படும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்துடன் கைகோர்த்துக்கொண்டு வசதி குறைந்த மாணவச் செல்வங்களை உச்சம் தொடச் செய்யும் உன்னத முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறையில் காணப்படும் பரீட்சை முறை தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் காணப்படுவதனை மறுப்பதற்கு இல்லை. இந்த பாடசாலை கல்வி முறைமைகள் நவீன தொழிற்சந்தைக்கு எத்தனை பொருத்தமானது என்பது கேள்விக்குறியே, அந்த வகையில் நோர்தன் யுனிவர்சிட்டி நவீன தொழில்துறைகளை, தொழில் வான்மையாளர்களை உருவாக்கும் ஓர் சிறந்த மையமாக மாற்றம் பெற்று வருகின்றது.
உயர்தர பரீட்சை
உயர்தர அல்லது சாதாரண தரம் கற்ற மாணவர்கள் அடுத்து தங்களை எவ்வாறு தயார் படுத்திக் கொள்வது என்பது சற்றே சவால் மிக்க காரியமாகவே அமைகின்றது. அண்டை நாடான இந்தியா போன்ற நாடுகளில் மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்த நிலையில் காணப்படுகின்றனர்.
அதற்கு அம் மாணவர்களுக்கு கிடைக்கும் அரிய கல்விச் சூழல் உறுதுணையாக அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை கல்வியானாலும் வேலை வாய்ப்பானாலும் இந்தியாவில் அதற்கு தனியான சிறப்பு காணப்படுகின்றது.
எனினும் அண்மைக்காலம் வரையில் இலங்கையில் தகவல் தொழில்நுட்ப துறையின் பல்வேறு பரிமாணங்கள் வெளிக்கொணரப்படவில்லை என்று கூற வேண்டி இருக்கின்றது.
ஏனெனில் இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறைசார் வல்லுனர்களின் எண்ணிக்கை அல்லது தகவல் தொழில்நுட்பம் சார் ஆளணி வளம் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது.
எந்த துறையை தெரிவு செய்ய வேண்டும்? எவ்வாறு கற்க வேண்டும் ? எந்தத் துறைகளில் எல்லாம் அதிக அளவு தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன? என்பது பற்றிய போதிய புரிதல் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் குறைவாகவே காணப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு வெட்டு புள்ளி அடிப்படையில் தகுதி பெற்றுக் கொள்ளாத மாணவர்கள் எவ்வாறான துறைகளில் ஜொலித்து மிளிர முடியும் என்பது பற்றிய அறிவாற்றல் குறைவாகவே காணப்படுகின்றது.
மாணவர்களின் இளையவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து நோர்தன் யுனிவர்சிட்டி மிகப்பெரிய வாய்ப்பை அல்லது வாழ்க்கையை மாணவர்களுக்கு உருவாக்கி கொடுத்துள்ளது.
நோர்தன் யுனிவர்சிட்டி
இந்த தளம் அல்லது களம் மாணவர்களின் திறனை விருத்தி செய்வது மட்டுமின்றி அவர்கள் வாழ்க்கையில் சிகரம் தொடுவதற்கு உந்து சக்தியாக அமைந்திருக்கிறது என்றால் மிகைப்பட போவதில்லை.
கொழும்பை மட்டுமே மையப்படுத்தி இருந்த தகவல் தொழில்நுட்பம் சார் கற்கை நெறிகளை வடக்கில் மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் சீரிய பணியை நோர்தன் யுனிவர்சிட்டி செய்து வருகின்றது.
இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தொழிற்துறையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பெரும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இளைய தலைமுறையினர் சர்வதேச ரீதியில் தொழிற்சந்தையில் போட்டியிட்டு வெற்றி நடை போடுவதற்கு நோர்தன் யுனிவர்சிட்டி சிறந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வடக்கு மாணவர்களில் பலருக்கு தங்களது திறமைக்கு தீணி போடக்கூடிய வகையிலான கற்கை நெறிகளை தெரிந்து அவற்றில் வெற்றிப்படிகளை எட்டிப்பிடிப்பதற்கு SLITT உடன் இணைந்து வட மாகாணத்தில் உலகத் தரம் வாய்ந்த ஓர் பல்கலைக்கழகமாக அனைவருக்கும் கல்விச் சேவையை வழங்க நோர்தன் யுனிவர்சிட்டி வழங்கும் சேவை போற்றப்பட வேண்டியதாகும்.
Visit our website:- https://northernuni.lk/application-form/
மேலும் தகவல்களுக்கு :- 0771471471
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |