இலங்கையில் ஒரு கோப்பை தேனீரின் விலை சடுதியாக அதிகரிப்பு
இலங்கையில் ஒரு கோப்பை தேனீர் விலையை 60 ரூபாவாக உணவக உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளனர்.
சீனி மற்றும் எரிவாயு விலை உயர்வால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக 30 ரூபாய்க்கு விற்பனையான ஏராளமான பொருட்கள் திடீரென இரு மடங்கு விலை உயர்ந்ததால், நுகர்வோர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விறகின் தேவை அதிகரித்துள்ளதுடன், ஐந்து சிறிய விறகுகள் கொண்ட ஒரு கட்டு 120 ரூபாயாக உயர்ந்துள்ளது.
எரிவாயு, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக விறகின் தேவை அதிகரித்துள்ளதுடன், இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு கட்டு விறகு 40 - 60 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள ஐந்து மற்றும் ஆறு மரத்துண்டுகள் கொண்ட ஒரு கட்டு விறகு நகர்ப்புறங்களில் 120 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan
