இலங்கையில் கோவிட் மரணங்கள் சடுதியாக அதிகரிப்பு
இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.'
1. உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான பெண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்தம் விசமானமை மற்றும் கோவிட் தொற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. ஹொரபே பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் கடந்த 7ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த்தொற்று, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. அகுரன பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் தெல்தெனிய வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய் மற்றும் கோவிட், நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட், நிமோனியா, புற்று நோய் மற்றும் நீரிழிவு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan