பெண் மருத்துவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
பெண் வைத்தியரை பாலியல் அத்துமீறல்கள் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய அந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இதேவேளை சந்தேகநபரின் சகோதரி மற்றும் அவரது கணவர் இருவரையும் இந்த மாதம் 17 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரின் சகோதரி கைது செய்யப்பட்டார்.
இதேவேளை அவரது கணவர் மொபைல் போனை திருடியதற்காக கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் விசாரணை
கடந்த ஞாயிறன்று இரவு பெண் மருத்துவரை அவரது விடுதி அறைக்குள் கூர்மையான கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அவரை தவறான முறைக்குட்படுத்தியதன் பின்னர் அவரது தொலைபேசியைத் திருடிக் கொண்டு சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் நடமாட்டங்களை, மருத்துவரின் திருடப்பட்ட தொலைபேசி மூலம் பொலிஸார் கண்காணித்துள்ளனர்.
அதன் மூலமாக நேற்று(12.03.2025) காலை சந்தேகநபரை கல்னேவ பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
