பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க திட்டம்?
பாலியல் துஷ்பிரயோக வழக்கு விசாரணைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் வகையில் குறிப்பிட்ட காலக்கெடுவை இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது.
தற்போது மூன்று மாத கால அவகாசம் தொடர்பில் ஆராயப்படுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
“இவ்வாறான வழக்குகளில் பெரும்பாலானவை தீர்க்க பல வருடங்கள் ஆகும், சில சமயங்களில் பாதிக்கப்பட்ட இளம்பெண் முதிர்ந்த பெண்ணாக மாறிவிடுவார்.
புதிய நடைமுறைகளின்படி, பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பான விசாரணைகளை குறைந்தது மூன்று மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்” என அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சு மற்றும் அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என வினவியபோது,
சட்ட கட்டமைப்பை முடிக்க கணிசமான நேரம் எடுக்கும் என்பதால் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தை பற்றி உறுதியாக கூற முடியாது என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
