மட்டக்களப்பில் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் வீட்டில் திருட்டு! ஒருவர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை பகுதியில் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் வீட்டில் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற திருடன் ஒருவரை நேற்று சனிக்கிழமை (18.02.2023) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 4 பவுண் தங்க ஆபரணங்களை குறித்த திருடன் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த பிரதேசத்திலுள்ள ஒய்வு பெற்ற இராணுவ மேஜர் வீட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி வீடடில் அனைவரும் இருந்துள்ள நிலையில் அங்கு வந்து சென்ற நபர் அங்கிருந்து தங்கசங்கலி காப்பு, தோடு என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் திருடனை நேற்று கைது செய்துள்ளனர்.
அத்துடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களை திருடன் நீர் கொழும்பில் உள்ள அடகு கடைகளில் அடகு வைத்து 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை பெற்றுள்ளதாகவும் அவற்றை கைப்பற்றுவதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
