வடிவேல் சுரேஷ் - சதாசிவம் கைப்பற்றிய காணிகள்: நாடாளுமன்றில் அம்பலம்
அம்பகமுவ பிரதேச சபையில் வேவல்தாலாவ பிரதேசத்தில் 50 ஏக்கர் காணியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கைப்பற்றியுள்ளதோடு லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகேவும் அதே வேவல்தாலாவ பிரதேசத்தில் 50 ஏக்கர் காணியை மோசடியாக கைப்பற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற இன்றைய (2025.10.23) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நுவரெலியா மாட்டத்தில் இந்த நாட்டுக்காக வியர்வை சிந்தி உழைக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு காணிகள் இல்லாத நிலையில் முன்னாள் அரசியல் வாதிகள் மோசடியாக காணிகளை கைப்பற்றியிருக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட காணிகள்
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலே பொடோப் தோட்டத்தில் முன்னாள் உறுப்பினர் சதாசிவம் 15 ஏக்கர் காணியையும் தலவாக்கலையில் முன்னாள் அமைச்சர ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 50 ஏக்கரும் நுவரெலியா மாகொஸ்தொட்ட தோட்டத்தில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே 10 ஏக்கரும் என காணிககை கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, மாகொஸ்தொட்ட அசோக்காராம விகாரைக்கு பின் பக்கம் 10 ஏக்கர் மற்றும் லவர்ஸ் லீப் நீர் வீழ்ச்சிக்கு பக்கத்திலும் 10 ஏக்கர் காணியை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைப்பற்றியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



