அரச பாதுகாப்பில் சில பாதாள குழுக்கள்.. சபையில் அம்பலப்படுத்திய நாமல்!
அரச பாதுகாப்பில் திட்டமிடப்பட்ட குற்றச் செல்களில் ஈடுபடுவோருக்கு இடமளிக்க வேண்டாம் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று (2025.10.23) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் மற்றும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பெசிய அவர்,
“ஒரு குழு செயற்பாட்டில் ஈடுபடுகிறது. ஏனைய குழுவினர் கைது செய்யப்படுகின்றனர். இந்த செயற்பாட்டில் மக்களுக்கே அநீதி இழைக்கப்படுகிறது. எனக்கும் பிள்ளை இருக்கிறது. போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்பட்டு இளம் தலைமுறைகள் காப்பற்றப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் இயலாமை
அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. நாங்கள் அன்று அதற்காக விளையாட்டு மற்றும் பொழுது போக்குத் திட்டங்களை ஆரம்பித்தோம்.
ஆனால், அதற்கும் நீங்கள் குறை கூறினீர்கள். இவ்வாறான திட்டங்களை செய்யுங்கள். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். திட்டமிடப்பட்ட குற்றச் செல்களில் ஈடுபடுவோரை காப்பற்ற வேண்டாம்.
மித்தெனிய சம்பவத்திற்கு தடுத்து வைத்து விசாரிக்கும் ஆணை பிறப்பித்தார்கள். ஆனால் புவக்தண்டாவே சனாவுக்கு தடுத்து வைத்து விசாரிக்கும் ஆணைப் பிறப்பிக்கவில்லை.
போதைப்பொருளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். அரசாங்கம் தங்களின் இயலாமையை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒடுக்க பார்க்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



