பொருளாதாரத்தை நிலையானதாக்குவதன் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்: அரசாங்கம்
பொருளாதாரத்தை படிப்படியாக நிலையானதாக்குவதன் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த நோக்கத்திலேயே தற்போது வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
படிப்படியாகப் பொருளாதாரத்தை நிலையானதாக்குவதன் மூலமே மக்களின் கனவுகளை நனவாக்க முடியும்.
வாகன இறக்குமதி
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு பாதிப்பு ஏற்படாமல், இறக்குமதி வரி வருவாயையும் பார்த்த பின்னரே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
நான்கு ஆண்டுகளாக வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்த ஒரு நாட்டின் பொறுப்பை ஏற்றிருப்பதால், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அனுமதிக்க முடியாது.
தற்போது வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதிக்கான வரிகளில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து எதிர்காலத்தில் படிப்படியாகத் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



