ரணிலிடம் அநுர அடிபணிந்து விடுவார்: ரஞ்சித் மத்தும பண்டார பகிரங்கம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), ரணிலிடம் அடிபணிந்து விடக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கம்
"நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஊழல் எதிர்ப்புக்கான குழுவின் தலைவராக அனுரகுமாரவே நியமிக்கப்பட்டிருந்தார்.
அக்காலத்தில் அவர் அடிக்கடி ரணில் விக்ரமசிங்கவைச் (Ranil Wickremesinghe) சந்தித்து வந்தார்.
இந்நிலையில், இப்போதும் கூட அவர் மீண்டும் ரணிலிடம் அடிபணிந்தாலும் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |