கருங்கடல் நடுவில் இரண்டாக பிளந்த ரஷ்ய கப்பல்
4,000 டொன் அளவில் எண்ணையை ஏற்றிச்சென்ற ரஷ்ய கப்பலொன்று நடுக்கடலில் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கப்பல் கருங்கடலில் சென்றுகொண்டிருக்கும் போது புயலில் சிக்கியதால் உடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஸுட்(Mazut) எனப்படும் கனரக எரிபொருள் எண்ணெயை இந்த கப்பல் கொண்டு சென்றுள்ளது. கப்பலில் ஏற்பட்ட பிளவால் தற்போது கடலில் எண்ணெய் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டியுள்ள உக்ரைன்
13 ஊழியர்கள் தற்போது கப்பலில் சிக்கிக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இழுவை படகுகள் மற்றும் ஹெலிகொப்டரை உள்ளடக்கிய குழு தற்போது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எனினும் ஒரு ஊழியர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇷🇺 Two Russian oil tankers wrecked in Black Sea
— A.Seeker (@Nomad_Thinker) December 15, 2024
Two Russian oil tankers with 29 crew members on board have been heavily damaged in the Black Sea, triggering an oil spill, authorities in Russia have said.
At least one crew member was reportedly killed. The second ship was said… pic.twitter.com/0usRMCIwG7
இந்நிலையில், ரஷ்யாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே இந்த விபத்துக்கு காரணம் என உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
Two Russian tankers, Volgoneft-212 and Volgoneft-239, sink in the Kerch Strait#ships #tanker #storm pic.twitter.com/Khvc88EeCN
— World Marine Ships (@WorldMarineShip) December 15, 2024
இந்த எண்ணெய் கப்பல் மிகவும் பழைய கப்பல் எனவும் இதனால் அந்த கப்பலால் புயலை எதிர்கொள்ள முடியாமல் போனதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |