இந்தியாவுக்கான விசேட விஜயத்தில் அநுர சந்தித்த முக்கியஸ்தர்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து வருகின்றார்.
ஜனாதிபதி இன்று (15.12.2024) மாலை 5:30 மணியளவில் புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வழியாக இந்தியா சென்றடைந்தார்.
இதன்போது, அவர் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு
இந்திய - இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புக்கள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக ஜனாதிபதி தனது 'X' தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
During my official visit to India, I had the privilege of engaging in productive discussions with Finance Minister @nsitharaman, External Affairs Minister @DrSJaishankar, and National Security Advisor Shri Ajit Doval. Our conversations focused on strengthening Indo-Sri Lanka… pic.twitter.com/A5mkZ4TS1D
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) December 15, 2024
மேலும், இந்த கலந்துரையாடல்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஆழப்படுத்துவதை உறுதிசெய்யும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |