கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள்
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட 14 கடற்படையினருக்கு எதிராக 667 குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டடன.
இதனை தொடர்ந்து, கொழும்பு விசேட ரயல் அட் பார் மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் குறித்த 14 கடற்படையினருக்கும் எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 14ஆம் குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்தகரன்னாகொட உட்பட மற்றைய 13 பேருக்குமாக ஜந்து ஜனாதிபதி சட்டத்தரணிகள் உட்பட 75 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
இந்நிலையில், இந்த வழக்கு பல நாட்களாக தொடர்ந்த நிலையில் இது தொடர்பான தெளிவான பல விடயங்களை, ஊடறுப்பு நிகழ்ச்சியின நேரலையில் கலந்து கொண்டு விளக்குகிறார் சட்டத்தரணி கே.வி தவராசா,