ரணில் வழங்கிய சம்பள அதிகரிப்பை கழித்தால் மிகுதி 950 ரூபாவே: ரஞ்சித் மத்தும பண்டாரவின் விளக்கம்
அரச ஊழியர்களுக்கு இந்த அரசாங்கத்தால் 8250 ரூபாவே சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படவுள்ள 5950 ரூபாவிலும் 5000 ரூபா ரணில் விக்ரமசிங்க மார்ச் மாதம் வரை வழங்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதனை கழித்தால் 950 ரூபாவே அரச ஊழியர்களுக்கு இந்த வருட சம்பள அதிகரிப்பாகக் கிடைக்கிறது. ஏப்ரல் மாத சம்பளம் கையில் கிடைக்கும் போது, அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரச ஊழியர்களுக்குத் தெரியவரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25.02.2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எந்த மாற்றத்தையும் செய்யவில்லை
அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதுவரை எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
ஆனால் அவர்கள் கடந்த அரசாங்கங்களின் கொள்கைக்கு மாறிவிட்டனர். தனியார் மயப்படுத்தல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.
இன்று தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய இவர்கள் தற்போது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.
நெவில் பெர்ணாந்து பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடாவின் புதியா விசா விதிகள்... இந்தியர்கள் உட்பட கடும் சிக்கலில் வெளிநாட்டு மாணவர்கள் News Lankasri

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது? News Lankasri

22 வயதில்.., பயிற்சியில்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan

பிரித்தானியாவில் சொந்த குடும்பத்தை கொன்ற இளைஞர்: குற்றத்தை ஒப்புக்கொண்டு வழங்கிய அதிர்ச்சி! News Lankasri
