போதைப்பொருள் பாவிப்போரில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு: எதிர்க்கட்சி கூறும் தகவல்
போதைப்பொருள் பாவிப்பவர்களின் எண்ணிக்கை இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (2025.10.24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவிப்போர்
அவர் மேலும் கூறுகையில்,
“2025 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின் படி ஹோரோயின் பாவிப்போர் 120,000 மற்றும் ஐஸ் 140,000, கஞ்சா பாவிப்போர் 300,000 அதிகரித்துள்ளனர்.போதை மாத்திரைகள் பாவிப்போர் 50,000 பேர் என தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களிலும் பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் பரபரப்பாக்கப்படவில்லை. வரலாற்றில் இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே கொல்களன் மூலம் போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்டன.
எமக்கு தெரிந்த விதத்தில் கடல் மார்க்கமாகவே போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டன. போதைப்பொருள் குறைவடைந்தால் அதன் விலைகள் அதிகரிக்கப்படும். விநியோகமும் முடக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை. எம்மிடம் தகவல்கள் இருக்கின்றன.
அரசின் கடந்த காலம்
இந்த அரசாங்கத்தின் கடந்த காலம் பயங்கரமானது. அதனால் இந்த தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது.

அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் கொலை குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அவர்கள் ஜனநாயக ரீதியில் அரசியல் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மன்னிப்பு கிடைத்தமைக்கு நாங்கள் சந்தோசப்படுகிறோம். சரியான விசாரணை நடத்தினால் இன்று அரசாங்கத்தில் இருப்பவர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |