கோப் குழு தலைவரின் சர்ச்சைக்குரிய சமிக்ஞை: பெரும் நெருக்கடியில் கிரிக்கெட் சபை
பொது நிறுவனங்களுக்கான விசாரணை குழுவின் (கோப்) சில உறுப்பினர்களும் அதன் தலைவர் ரஞ்சித் பண்டாரவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான விசாரணையை தவறாக கையாண்டதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதால் இலங்கையின் கிரிக்கெட் தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கையின் கிரிக்கெட் சபை மீதான விசாரணை முடியும் வரை பேராசிரியர் பண்டார குழுவின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட வேண்டும் என சில கோப் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் “கோப் தலைவர், கை சமிக்ஞைகளைப் பயன்படுத்தி, கடந்த செவ்வாய்க் கிழமை கூட்டத்தில் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் காணொளிகளில் இது தெளிவாகத் தெரியும்” என்று சஜித் பிரேமதாச குற்றச்சாட்டொன்றை நாடாளுமன்றில் முன்வைத்தார்.
எதிர்வரும் நாட்களில் கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் கோப் குழு மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால விசாரணைகளுக்கு பேராசிரியர் பண்டார தலைமை தாங்க அனுமதிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
"நவம்பர் 24, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் கோப் குழு கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பேராசிரியர் பண்டாரவை தற்காலிகமாக நீக்கிவிட்டு, வேறொரு தலைவர் ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், பேராசியர் பண்டாரவை தலைமை தாங்கும் கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான எந்தவொரு விசாரணையிலும் தானும் கோப் குழுவின் சில உறுப்பினர்களும் பங்கேற்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கோப் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பேராசிரியர் பண்டார மீறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சுமத்தியுள்ளார்.
வெல்லம்பிட்டி பாடசாலையில் நேர்ந்த அனர்த்தம்! கல்வி அமைச்சரின் பணிப்புரை - இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி நடவடிக்கை
பேராசிரியர் பண்டாரவின் பதில்
"கோப் தலைவர் சிறப்புரிமைகள் சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் கையாளப்படலாம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொல்லவத்தவும் கோப் தலைவரை தற்காலிகமாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பேராசிரியர் பண்டார, விசாரணையை அரசியலாக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
“கோப் முடிந்தவரை சுதந்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், கிரிக்கெட் சபை மீதான விசாரணையை அரசியலாக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களால் திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
நான் என் உதடுகளில் விரல்களை வைத்து, பல உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பேசுவதால், எதிர்க்கட்சி எம்.பி.க்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்," என்று அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கை கிரிக்கெட் அபய் மீதான விசாரணைகளில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதோடு, சரியான தீர்வு நிலை குறித்து விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கேள்விகளும் எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |