சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைவதற்கு ரஞ்சித் மத்தும பண்டார மறுப்பு
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இணைந்து சர்வகட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளதாக வெளியான செய்திகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று(18) மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் பக்கம் மாற விரும்பவில்லை. எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று எனது சொந்தக் கட்சித் தலைவர்களே மக்களிடம் கூறிய காலம் இருந்தது. அப்போதும் கூட தாம் குறுக்கிடவில்லை.
கடந்த 2006ஆம் ஆண்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட போதும் அதை ஏற்க மறுத்துவிட்டேன்.
அவ்வாறாயினும் சில குழுக்களால் ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் ஒரு மோசமான திட்டம் இருந்தது.
சர்வக்கட்சிக்கு உதவி வழங்க நடவடிக்கை
அனைத்து கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது ஒரு விடயம். கட்சிகளை பிரிப்பது என்பது வேறு விடயம்.
இந்த நிலையில் தமது கட்சி அரசாங்கத்துக்குள் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல்
நாடாளுமன்றக் குழுக்கள் மூலம் தனது ஆதரவை வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
