ஜனாதிபதி கனவை நோக்கி செயற்படும் நாமல்!
சர்வகட்சி அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளாமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் நாமல் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு நாமல் இவற்றையெல்லாம் செய்து வருகின்றார் எனவும் நாமல் ஏற்கனவே தனது ஜனாதிபதிக் கனவை நனவாக்க மற்றொரு மாபெரும் யுக்தியை மேற்கொண்டுள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதேவேளை நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை
மீண்டும் களமிறக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குரல்கள்
ஒலித்து வருகின்றன.
மாநாட்டின் தலைவர்
எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி மாநாட்டை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் மகிந்த ராஜபக்சவைத் தொடர்ந்து கட்சியின் தலைவராகவும், நாமல்
ராஜபக்சவை கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும் பசில் ராஜபக்சவுக்கும், கோட்டாபய ராஜபக்சவுக்கும் இம்முறை எவ்விதமான பதவிகளும் வழங்கப்படமாட்டாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 23 நிமிடங்கள் முன்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
