சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சனின் தற்போதைய நிலை! வெளியாகியுள்ள தகவல்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, இதுவரை கைதிகளுக்கான இலக்கம் வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அங்கு அவர் தனி சிறைகூடமொன்றில் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
எனினும், ஏனைய சிறை கூடங்களில் மூன்று கைதிகள் விகிதம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த சிறைச்சாலையில் சிறை கைதிகள் மற்றும் சந்தேகநபர்கள் என 1100 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவிக்கின்றார்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வெளியிலிருந்து உணவுகளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதுடன், மாதத்திற்கு ஒரு முறை மாத்திரமே உறவினர்களுக்கு அவரை சந்திக்க முடியும்.
கடந்த சில தினங்களாக ஏனைய சிறை கைதிகளை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கிடைத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனி சிறை கூடத்திலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தலையணை, பாய் மற்றும் போர்வை ஆகியன கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெத்தையை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை முன்வைக்க முடியும் என்ற போதிலும் அவர் இதுவரை மெத்தையை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை விடுக்கவில்லை.
எவ்வாறாயினும், உடற்பயிற்சிகளை செய்வதற்கும், நாளாந்த பத்திரிகைகளை வாசிப்பதற்கும் ரஞ்சன் ராமநாயக்க நேரத்தை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
