வெலிகடை சிறையில் இணைய வசதியை பயன்படுத்தி ரஞ்சன் செய்யும் வேலை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, சிறையில் இருந்தவாறு என்ன செய்து வருகிறார் என்ற தகவலை சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய வெளியிட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க ஆரோக்கியத்துடன் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
பதுளை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான தொழிற்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் அவர் இணையத்தளம் வழியாக பட்டப்படிப்புக்கான கல்வியை மேற்கொண்டு வருகிறார் எனவும் உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam