சிறைக்குள் ரஞ்சன் ராமநாயக்க படும் அவஸ்தை - அதிகாரிகளின் மோசமான செயற்பாடு
நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்னற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கழிப்பறைக்கு செல்வதற்கு வசதியான நாற்காலி ஒன்று வழங்குமாறு அவர் விடுத்த கோரிக்கையை சிறைச்சாலை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதன் காரணமாகவே அவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடுமையான முழங்கால் வலி நீண்ட காலமாக உள்ளமையினால் சாதாரண கழிப்பறையில் தன்னால் அமர முடியவில்லை என அவர் குறிப்பட்டுள்ளாார். இதனால் தான் கழிப்பறைக்கு செல்வதற்காக நாற்காலி ஒன்று வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் அதற்கு அதிகாரிகள் பதிலளிக்காமையினால் ரஞ்சன் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரவு உணவு மற்றும் காலை உணவு பெற்றுக்கொள்ளாமல் இருந்தமையினால் அதிகாரிகள் அவருக்கு நாற்காலி ஒன்று வழங்க நடவடிக்கை எடுத்து, அதனை வழங்கியுள்ளனர். எனினும் பின்னர் அந்த நாற்காலியை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாகவும் மீளவும் வழங்கவில்லை என தெரியவந்துள்ளது