பாகிஸ்தானுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை இலவசமாக வழங்குவோம்.. தமிழ் விஞ்ஞானியின் அதிரடி பதில்!
இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையை பாகிஸ்தானுக்கு இலவசமாகவே வழங்கும் என இந்தியாவின் மூத்த விஞ்ஞானி டாக்டர் அ. சிவதாணு பிள்ளை கூறிய கேலியான பதில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
பிரம்மோஸ் ஏவுகணை குறித்து, அண்மையில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பாகிஸ்தான் இராணுவ ஜெனரலுடனான ஒரு உரையாடல் தொடர்பில் டாக்டர் சிவதாணு பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
துபாயில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சி ஒன்றில், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு மூத்த இராணுவ அதிகாரி தன்னை அணுகி, “இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையை பாகிஸ்தானுக்கு விற்குமா” என கேட்டதாக சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிய அதிகாரி
அதன்போது, கிண்டலாக, “பாகிஸ்தானுக்கு இலவசமாகவே வழங்கப்படும்” என பதிலளித்ததாகவும் சிவதாணு பிள்ளை நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
இந்த பதிலுக்கு பிண்ணனியில், பாகிஸ்தான் மீது இலவசமாகவே ஏவுகணையை செலுத்துவோம் என்பதை வைத்தே அவர் பதிலளித்துள்ளார் என கூறப்படுகின்றது.
“fire-and-forget” navigation systems, low radar visibility, நிலம், கடல், வான் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக்கூடிய திறன் என்பன இதன் முக்கிய அம்சங்களாகும்.
இந்நிலையில், உலகின் விரைவான ஸூப்பர்சோனிக் ஏவுகணையாக இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை இருந்த வருகின்றது. இது எதிர்காலத்தில், 1,500 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கக்கூடிய Bramhos 2.0 பதிப்பும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |