சார்க் அமைப்பிற்கு பதிலாக புதிய அமைப்பு! சீனாவின் புதிய நகர்வு
தெற்காசிய நாடுகளின் சார்க் அமைப்பிற்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்குவதற்காக பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக சீன நகரமான குன்மிங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
வர்த்தக உறவுகள்
இந்தியாவை தவிர்த்து இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பிற சார்க் நாடுகளையும் இந்தப் புதிய கூட்டணிக்குள் உள்ளீர்ப்பதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன், பிராந்தியத்தின் நாடுகளுக்கிடையே வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |