பட்டப்படிப்பைத் தொடரும் ரஞ்சன் ராமநாயக்க! பரீட்சைக்குத் தோற்ற ஆயத்தம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க, சிறையிலிருந்தபடி பட்டப்படிப்பைத் தொடர்வதாக தெரிய வந்துள்ளது.
தற்போதைக்கு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சமூக விடயங்கள் தொடர்பான பட்டப்படிப்பை ஆரம்பித்துள்ளார்.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் இந்தப் பட்டப்படிப்பின் முதலாம் வருட பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 04ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ரஞ்சன் ராமநாயக்கவும் கலந்து கொண்டு பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்.
சிறைச்சாலைக்காவலர்களின் கண்காணிப்புடன் பரீட்சை மண்டபத்துக்கு ரஞ்சன் ராமநாயக்க சென்று வருவதற்கான ஏற்பாடுகளை அவரின் வேண்டுகோள் பிரகாரம் சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது