மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க
முட்டுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிகிச்சையின் பின்னர் மீண்டும் அங்குகொலபொலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் முட்டுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அவர் முற்றாக குணமடைந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.