ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் பாதுகாக்கப்படும்! - சஜித் பிரேமதாச
ரஞ்சன் ராமநாயக்கவின் உரிமைகளுக்காகவும், அவருக்கான நீதிக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தியினர் தொடர்ந்தும் குரல் கொடுப்பார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களும் அவருக்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழப்பதைத் தடுக்க ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த மனு 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதுவரை அவரது நாடாளுமன்ற ஆசனம் பாதுகாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
