சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயன்ற ரஞ்சன் ராமநாயக்க
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நெருக்கமான உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டதாக சிங்கள ஊடனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் அதற்கான விண்ணப்பம் இன்னமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சென்றடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அண்மையில் ரஞ்சன் சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எஸ்.பீ.திஸாநாயக்க, சரத் பொன்சேகா போன்றோர் சிறைச்சாலை சென்ற போதிலும் அவர்கள் மனரீதியாக பாதிப்புக்குள்ளாகவில்லை. எனினும் ரஞ்சன் மனரீதியான பாதிப்புக்குள்ளாகி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
