ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு பெரும்பான்மை வெற்றி கிட்டும் - அமைச்சர் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனவேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றியீட்டுவார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரணில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக தேர்தலில் களமறிங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அதிகூடியவாக்கு
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக தேர்தலில் களமறிங்கவில்லை.

அவர் எந்தவொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தாமலேயே இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.
அனைத்து கட்சிகள் இனங்கள் மதங்களை சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து செயற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி சுயாதீனவேட்பாளராகவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி வெற்றிபெறுவார்.
அது மாத்திரமல்ல ஜனாதிபதி தேர்தலில் அதிகூடிய வாக்குகளுடனேயே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று தேசிய தலைவராக மீண்டும் ஆட்சியமைப்பார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam