ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவது உறுதி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
தற்போது நாட்டில் உள்ள தலைவர்களில், சர்வதேசத்தை ஏற்றுக்கொண்டு, அனுபவமுள்ள, சந்தேகமில்லாமல் தீர்மானங்களை எடுக்கும் தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலைவர் ரணில்
ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 25 வருடங்களின் பின்னர் நாட்டின் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் வரிசையில் நிற்கும் வேளையில் நாட்டைக் கைப்பற்றுமாறு கோரும் வேளையில் சிலர் ஓடிப்போய் பல்வேறு விடயங்களை கூறி மக்களை தவறாக வழிநடத்த முயற்சித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam