ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள ரொட்னி பெரேரா
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக பரிந்துரைக்கப்பட்ட ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறுத்தியுள்ளார்.
அவருக்கு பதிலாக மூத்த வெளிநாட்டுச் சேவை அதிகாரி ரொட்னி பெரேராவை ரணிலின் புதிய நிர்வாகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலம்பகேவுக்கு பதிலாக பெரேராவை நியமிக்கும் முடிவை அரசாங்கம், நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவிற்கு (HPC) அறிவித்துள்ளது.
இத்தகைய இராஜதந்திர நியமனங்களை சபாநாயகர் தலைமையிலான குழு ஆராய்வது ஒரு சம்பிரதாயமாக கருதப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்சவின் பரிந்துரை
கொலம்பகேக்கு பதிலாக, வெளிநாட்டுச் சேவை அதிகாரி அருணி விஜேவர்தன மே மாத இறுதியில் வெளிவிவகாரச் செயலாளராக நியமிக்கப்பட்டமையை அடுத்து கொலம்பகேவை ஜப்பானில் பதவியேற்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிந்துரைத்தார்.
ரொட்னி பெரேராவின் மூத்த சகோதரரான ரொனால்ட் பெரேரா, இலங்கை காப்புறுதிக்
கூட்டுத்தாபனத்தின் (SLIC) தலைவராக அண்மையில் நியமனம் பெற்றுள்ளார்.
கொலம்பகேவுக்கு பதிலாக ரொட்னி பெரேரா நியமனம்
அவர்கள் இருவரும் ரணில் விக்ரமசிங்கவின் விசுவாசியான மறைந்த அமைச்சரவை அமைச்சர் போல் பெரேராவின் மகன்களாவர்.
ரொட்னி பெரேரா முன்னர் இலங்கையின் தூதுவராக வோஷிங்டனில் பணியாற்றியுள்ளார்.
JAICA (ஜெய்க்கா) நிதியுதவியுடன் கூடிய இலகு புகையிரத திட்டம், முன்னாள் ஜனாதிபதி
கோட்டாபயவினால் ரத்து செய்யப்பட்டதால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள
ஜப்பானுடனான உறவை சரிசெய்ய வேண்டும் என்பதற்காகவே கொலம்பகேக்கு பதிலாக, ரொட்னி
பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
