யாழில் விஜயகலா இல்லத்தில் ஜனாதிபதி ரணில் (Photos)
யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் (15.01.2023) முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
கந்தர்மடம் - பலாலி வீதியில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்கவை தமிழ் கலாச்சார முறைப்படி ஆராத்தி எடுத்து வரவேற்றுள்ளனர்.
அத்துடன் இந்து குருமார் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்ததோடு ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர்.
கலந்துரையாடல்
ரணில் விக்ரமசிங்க யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், வைத்தியர்கள், புத்திஜீவிகள், விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடியதோடு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பிலும் உரையாற்றியிருந்தார்.
குறித்த சந்திப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.














சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
