எதிர்வரும் 22 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ள ரணில் விக்ரமசிங்க
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிலைக்காக ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் எதிர்வரும் வியாழக்கிழமையன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலின் போது ஐக்கியக்கட்சி மக்களின் நேரடி வாக்குகளால் எந்தவொரு ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.
எனினும் கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது.
எனினும் உட்கட்சி முரண்பாடு காரணமாக இதுவரைக்காலமும் இந்த ஆசனம்
நிரப்பப்படாமல் இருந்து வந்தது.
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam