ஜனாதிபதியின் அடக்குமுறைகளுக்கு எதிராக நாங்கள் போராடுவோம்: எம்.ஏ.சுமந்திரன் (Video)
போராட்டக்காரர்கள் மீதான ஜனாதிபதியின் அடக்குமுறைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள், மக்கள் இயக்கங்களோடு சேர்ந்து அரசியல் கட்சிகளாக நாங்களும் இந்த அடக்கு முறைக்கு எதிராக போராடுவோம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி பதவியில் அமர்ந்த உடனே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைதியான போராட்டக்காரர்கள் மீது மிக மோசமான முறையில் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
மே 9ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்து விலகும் வேளையில், அந்த போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அதை எதிர்த்து அறிக்கை விட்டிருந்தார்.
அவசர கால சட்டம்
இப்படியாக அவசர கால சட்டத்தை பிரயோகித்து இவர்கள் மீது தாக்குதலை நடத்தினால் அரசாங்கத்திற்கு நான் கொடுக்கின்ற எனது ஆலோசனைகள் எல்லாவற்றினையும் நான் நிறுத்தி விடுவேன் என எச்சரிக்கையும் விட்டார்.
எதிர்கட்சியில் இருக்கும் போது அதுதான் அவருடைய நிலைப்பாடாக இருந்தால், ஆட்சிக்கு வந்த உடனே தலைகீழாக மாறியிருப்பதை நாம் காண்கின்றோம்.
ஆகையினால் மக்களை இவ்வாறு துன்புறுத்துவதும், அடக்குமுறையினாலே ஆட்சி நடத்த முடியும் என்றும் அவர் நினைப்பாராக இருந்தால் அது ஒரு போதும் சரியாக அமையாது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம் |
மகிந்தவின் பக்கத்தில் தொடர்புகளை பேணும் சாணக்கியன்: எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல் |