முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியினரின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள அலுவலகத்தில் இன்று(14.10.2024) இடம்பெறவுள்ளது.
பிரசார நடவடிக்கை
இதன்போது பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரசாரங்களை ஆரம்பித்தல், அதற்கான தொனிப்பொருள் மற்றும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேர்தல் மாவட்டங்களினதும் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri