நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புடன் சிதறிய பொதுக்கட்டமைப்பு: வெளிப்படுத்தப்பட்ட ஆதங்கம்
ஜனாதிபதி தேர்தலில் தேச திரட்சியை எதிர்பார்த்து, அதில் வெற்றியும் பெற்ற தமிழ் மக்கள் பொதுச்சபை, சில நாட்களில் வெளியாகிய நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புடன் மீள சிதறியுள்ளது என பொதுக்கட்டமைப்பின் முக்கியஸ்தரும் எழுத்தாளருமான நிலாந்தன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “ தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலை கையாண்ட போன்று, மற்றைய தேர்தல்களை கையாள முடியாததால் நாடாளுமன்ற தேர்தலில் விலகி இருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலில் பாவித்த சங்கு சின்னத்தை பாவிக்க வேண்டாம் என கோரினோம்.
கட்சிகள் விரும்பி இருந்தால் சங்கு சின்னத்தை எடுக்காது இருந்து இருக்கலாம். அதனையும் மீறி எடுத்துள்ளார்கள். சங்கு சின்னத்திற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும், பொது கட்டமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தமிழ் மக்கள் பேரவையின் கூர்ப்பாகவே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும். பொதுச் சபை அடுத்த கூர்ப்புக்கு போன பின்னரே தேர்தல்களை எதிர்கொள்ள முடியும்.
தமிழ் மக்கள் பொதுச்சபை
தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலில் தேச திரட்சியை எதிர்பார்த்து, அதில் வெற்றியும் பெற்றோம்.

அது சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புடன் மீள சிதறியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பலம் தமிழ் மக்கள் பொதுச்சபையிடம் இல்லாததால், அதில் இருந்து விலகி இருக்கிறோம்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri