2021 ஆம் ஆண்டுக்கான புதிய வேலைத்திட்டம் தொடர்பில் அறிக்கை கோரும் ரணில் விக்ரமசிங்க
2021 ஆம் ஆண்டுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய புதிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் தனக்கு விரிவானதொரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியில் தற்போது மறுசீரமைப்புகள் இடம்பெறவுள்ளன.
2021ஆம் ஆண்டு தலைமைப் பதவியில் மாற்றம் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்கு ரணிலும் இணக்கம் வெளியிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கட்சிக்கான புதிய வேலைத்திட்டம் குறித்து அவர் அறிக்கை கோரியுள்ளார்.
புதிய தலைவருக்கான போட்டியில் ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன ஆகிய இருவரின் பெயரே முன்னிலையில் இருக்கின்றது.
அத்துடன், அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வஜிரவிடம், ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan