ரணிலைக் காப்பாற்றிய ஐந்து வைத்தியர்களுக்கு புதிய சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளித்த 5 மருத்துவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணிலின் கைது விவகாரம்
2023ஆம் ஆண்டு, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தேபோது லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்திற்காக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட அன்று இரவு ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, மறுதினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

சில நாட்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்ற பின்னர் தன்னுடைய மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு பிணையில் செல்ல அனுமதிப் பெற்றதுடன், சிகிச்சையின் பின்னர் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சை மேற்கொண்ட ஐந்து மருத்துவர்களிடம் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam