அதிகாரத்தைப் பகிர்வதற்கு உடன்படுகின்றேன்! நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை - ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Sivaa Mayuri Jan 26, 2023 03:55 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

'இந்த நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை எனவும் இலங்கையில் உள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் உட்பட ஏனைய குழுக்களுடன் இணைந்து வாழ வேண்டும்‘ என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் சர்வகட்சி மாநாடு இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்ததாவது, 

காணி விடுவிப்பு 

‘’யாழ்ப்பாணம்- பலாலி இடம் விடுவிக்கப்படும் திகதி குறித்து நான் பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி மற்றும் முப்படை பிரதானிகளுடன் கலந்துரையாடினேன்.

அவர்களின் தீர்மானத்திற்கமையவே நாம் செயற்பட்டோம். காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் நாம் மறுக்கவில்லை.

நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன்.

அதிகாரத்தைப் பகிர்வதற்கு உடன்படுகின்றேன்! நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை - ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு | Ranil Wickremesinghe Convenes All Party Conference

13ஆவது அரசியல் திருத்தம்

எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும்.

இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள்.

அதனை இல்லாமல் ஒழிக்காவிட்டால், எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

அப்படியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும். ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய பார்த்தால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்.

அதிகாரத்தைப் பகிர்வதற்கு உடன்படுகின்றேன்! நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை - ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு | Ranil Wickremesinghe Convenes All Party Conference

 மாகாண சபை

நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன.

எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை. அதனை நடைமுறைப்படுத்தவில்லையென்றால் நாம் அதனை நீக்க வேண்டும்.

அரசியலமைப்பில் வைத்துக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது சரியானதல்ல. யுத்தம் முடிவடைந்தபோது பெருமளவிலான காணிகள் அரசாங்கத்திடம் இருந்தன. பின்னர் அவை முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரினால் பகிர்ந்தளிக்க்ப்பட்டன.

எனினும் காணிகள் பகிர்ந்தளிக்கும்போது பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க நாம் பாதுகாப்புத் தரப்பினரிடம் அதனை கையளிக்க வேண்டும். அது தொடர்பான ஆலோசனைகளை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

காணி ஆணைக்குழுவை நாம் விரைவில் நியமிக்க வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதமளவில் அதற்கான சட்டமூலத்தை நாம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கலாம்.

இதில் 09 பேரை மாகாண மட்டத்திலும் ஏனைய 12 பேரை ஜனாதிபதி சார்பாக நியமிக்கவும் நான் நினைத்துள்ளேன். அடுத்ததாக தேசிய காணி கொள்கையொன்றும் அறிமுகம் செய்யப்படும். காணி ஆணைக்குழுவால் தேசிய காணிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டின் 30 சதவீத்த்திற்கும் அதிகமான காணிகள் வனப்பகுதிகளாக மதிப்பிடப்பட்டுள்ளன. எவ்வித முறையான திட்டமும் இல்லாமலேயே அவசரமாக காணிகள் வனங்களாக உள்வாங்கப்பட்டுள்ளன.

ஆறுகள் ஆரம்பமாகும் இடங்களில் நாம் வனங்களை உருவாக்குவோம். நாம் வனங்களை அதிகரிப்போம். எனவே நாம் உருவாக்கும் தேசியக் கொள்கையடிப்படையில் அந்த 30 சதவீதம் எங்கே இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை நாம் காணி ஆணைக்குழுவிடம் ஒப்படைப்போம்.

30சதவீத காடுகளை உருவாக்குவதில் நானும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும்.

அதிகாரத்தைப் பகிர்வதற்கு உடன்படுகின்றேன்! நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை - ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு | Ranil Wickremesinghe Convenes All Party Conference

நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை

அதற்கான திருத்தமொன்றைக் கொண்டு வந்து வேண்டுமானால் அதனை தோற்கடித்து மாகாண பொலிஸ் ஆணைக்குழுவை நடைமுறைப்படுத்தலாம். இரண்டில் ஒன்றை செய்ய வேண்டும். நாம் செய்யக்கூடியவை பற்றிய யோசனைகளை தருகின்றேன்.

அது பற்றிய உங்கள் கருத்துக்களை என்னிடம் முன்வையுங்கள் நான் இதனை எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பேன். உங்களிடம் ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால், 04 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை வழங்கினால், அவற்றையும் உள்ளடக்கி நாங்கள் முன்னோக்கிச் செல்வோம்.

இந்த நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் உட்பட ஏனைய குழுக்களுடன் இணைந்து வாழ வேண்டும். நமது தேசிய கீதத்தில் "ஒரு தாயின் மக்கள்'' என்பதை நாம் பாதுகாத்தால், நம் நாடு ஒற்றுமையுடன் முன்னேற முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இன்று தமிழ் மக்களும் முஸ்லிம்களும் இந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இப்போது சிங்கள மக்களும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பொருளாதார, அரசியல் பிரச்சனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் படிப்படியாக தீர்த்து வைப்போம்.'' என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Downham, United Kingdom

24 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US