Anura Go Home என்று கொழும்பில் ரணில் ஆதரவாளர்கள் எதிர்ப்பு..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம் தொடர்பில் தற்போது கொழும்பில் ஒன்று திரண்டுள்ள ரணில் ஆதரவாளர்களால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்போது, “அநுர கோ ஹோம்” என்ற கூச்சல்களோடு அங்கு ஒன்று திரண்டுள்ளவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினரும் கொழும்பில் ஒன்று திரண்டு எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பெலவத்த ஜேவிபியின் தலைமைக் காரியாலயம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாரிய அளவில் எதிர்ப்புக்களை வெளியிடலாம் என்ற நிலையில், இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



