தெரிந்து கொண்டே ஆபத்தில் சிக்கிய ரணில்.. பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!
ஒருவர் மீதான விசாரணை நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமைகளில் திகதியிடப்பட்டால் அந்த திகதியை அவர்களின் சட்டத்தரணிகள் ஊடாக மாற்றும் வழக்கம் கடந்த காலங்களில் இருந்தது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றம் விடுமுறை என்பதால் பிணை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற காரணத்தினால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவ்வாறு செய்யமால் வெள்ளிக்கிழமை அன்றே விசாரணைக்கு முன்னிலையானார்.
ரணில் ஏன் இவ்வளவு பெரிய ஒரு ஆபத்தை தேர்தெடுத்தார் என்பதில் தற்போது குழப்பம் நிலவுகின்றது.
இலங்கையின் அரசியலமைப்பின் படி, முன்னாள் ஜனாதிபதி பதவியில் உள்ள ஒருவரை கைது செய்யவோ அல்லது அவர் மீது வழக்கு தொடரவோ முடியாது.
எனினும், முன்னாள் ஜனாதிபதிகளின் விடயத்தில் இந்த அரசியலமைப்பு எவ்வாறு செயற்படும் என்பதில் தெளிவான விளக்கங்கள் இல்லை.
ஆனாலும், கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உரிய சலுகைகளும் வரப்பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
எனினும், தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்குகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
