பணிகளைத் துரிதப்படுத்துங்கள்: ஜனாதிபதி பணிப்புரை (Photos)

Sri Lankan Tamils R. Sampanthan Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Rakesh Jun 10, 2023 08:04 AM GMT
Report

நல்லிணக்கத்துக்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நல்லிணக்கத்துக்கான செயற்றிட்டம் தொடர்பில் நேற்று (09.06.2023) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 5 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

பணிகளைத் துரிதப்படுத்துங்கள்: ஜனாதிபதி பணிப்புரை (Photos) | Ranil Wickramasinghe About Reconciliation

நல்லிணக்கத்துக்கான அலுவலகம்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில், தேசிய காணி சபையொன்றை நிறுவுதல் மற்றும் தேசிய காணி கொள்கையை உருவாக்குதல்.

மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை மிகவும் திறம்படச் செயற்படுத்துதல், அதன் டிஜிட்டல் மயமாக்கல் செற்பாடுகளை நிறைவு செய்தல் மற்றும் இதுவரை தகவல் சேகரிக்க முடியாத காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.

பணிகளைத் துரிதப்படுத்துங்கள்: ஜனாதிபதி பணிப்புரை (Photos) | Ranil Wickramasinghe About Reconciliation

அத்துடன், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் என்பவற்றை ஸ்தாபித்தல்.

மற்றும் அது தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவற்றைப் பூர்த்தி செய்து, அது தொடர்பான அறிக்கையை வழங்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.

காணிப் பிரச்சினை

இந்த கலந்துரையாடலில், காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறைமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், அரச துறையினரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை விடுவித்தல், மகாவலி காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பணிகளைத் துரிதப்படுத்துங்கள்: ஜனாதிபதி பணிப்புரை (Photos) | Ranil Wickramasinghe About Reconciliation

கைதிகளின் விடுதலை மற்றும் பொதுமன்னிப்பு தொடர்பில் நீதி அமைச்சின் ஊடாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

அதிகாரப் பரவலாக்கம், மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாகாண ஒம்புட்ஸ்மன் நியமனம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் மற்றும் தொடர்புடைய நிறுவன பிரதானிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

பணிகளைத் துரிதப்படுத்துங்கள்: ஜனாதிபதி பணிப்புரை (Photos) | Ranil Wickramasinghe About Reconciliation 

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் கிழக்கு மற்றும் வடக்கு மாகாண காணி ஆணையாளர்கள் ஆகியோர் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US