ஜனாதிபதியின் வீட்டின் மீது தீ வைத்த சம்பவம்: பிரபல முன்னாள் நீச்சல் வீரரிடம் விசாரணை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ மூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரபல முன்னாள் நீச்சல் வீரர் ஜுலியன் போலிங்கிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.
சுமார் எட்டு மணித்தியாலங்கள் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்ற விசாரணைப் பிரிவில் நேற்றைய தினம் ஜுலியன் போலிங் முன்னிலையாகியிருந்தார்.

அத்துடன் வர்த்தகரான ஜொனதன் மார்டென்ஸ்டைன் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
| தீ வைக்கப்பட்ட ரணிலின் வீடு தொடர்பில் வெளிவரும் தகவல் |
பிழை செய்திருந்தால் தண்டனையை ஏற்க தயார்
இதேவேளை, தாம் ஏதேனும் பிழை செய்திருந்தால் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயார் என போலிங் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள வீதியிலேயே தமது வீடும் அமைந்துள்ளதாகவும், இதனால் இவ்வாறு விசாரணை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகள் குறித்து தாம் அதிருப்தி அடையவில்லை எனவும், ஜனாதிபதியின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| ரணிலின் வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகம் |
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan