அடுத்த சில மாதங்களில் மக்கள் நாட்டை இழக்க நேரிடும்! அரசியல் முக்கியஸ்தர் ஆரூடம்
நிலவும் நெருக்கடியை தீர்க்க தவறினால் அடுத்த சில மாதங்களில் மக்கள் நாட்டை இழக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாட்டின் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை உயர்த்துவதற்கு அனைத்து தரப்புக்களுக்கும் இடையில் ஒரு தேசிய உடன்பாடு தேவை.
நிதியமைச்சருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு உள்ளது. அதனை அரசாங்கம் தீர்க்க வேண்டும்.
நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அதிக நேரத்தை செலவிட்ட போதும் அவற்றுக்கான தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டது.
சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. அது இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பதிலாக தற்போதுள்ள நிலைமைக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாடு பாதுகாக்கப்பட்டு முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும்.
மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பாக அனைத்துத் தரப்பினருக்கும் இடையில் வலுவான உடன்பாடு எட்டப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan