மைத்திரியின் அதிகாரங்களை திட்டமிட்டு பறித்த ரணில்! - காலம் கடந்து வெளியாகியுள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரங்களை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) 2015ம் ஆண்டு எவ்வாறு பறித்தார் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) வெளிப்படுத்தியுள்ளார்.
கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய வஜிர அபேவர்தன இதனை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“தன்னை ஜனாதிபதியாக்கினால் வாழ்நாள் முழுவதும் அவரை (ரணிலை) ‘சார்’ என்று அழைப்பேன் என்று மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) கூறினார். ஆனால் சிறிசேன யார் என்பது ரணிலுக்கு நன்றாகவே தெரியும்.
எனவே அவரிடம் இருந்த அனைத்து அதிகாரங்களையும் அகற்றி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் எவ்வாறு குறைக்கப்பட்டது என்பது குறித்தும் வஜிர அபேவர்தன வெளிப்படுத்தினார்.
2018 அக்டோபரில் அரசியலமைப்பு நெருக்கடியின் போது மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றார் என்ற செய்தியை கேட்டபோது ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பதிலளித்தார் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.
