இணக்கப்பாடுகளை புறம் தள்ளிய ரணில்: சுமந்திரன் விசனம்
நாடு வங்குரோத்தாக இருந்த சந்தர்ப்பத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துரையாடி இணக்கப்பாட்டை எட்டிய சந்தர்ப்பத்தில், எவ்வித அறிவிப்புக்களும் இன்றி பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டவரே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து
“நாட்டு மக்கள் மத்தியில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது செல்வாக்கு அதிகரித்துள்ளது. வங்குரோத்தாக நாடு இருந்த போது அதனை அவரே மீட்டெடுத்தார் என்ற எண்ணமும் காணப்படுகிறது.
அது தொடர்பில் எவ்வித குறைகளையும் நான் சொல்ல விரும்பவில்லை. அவரை விட வேறு எந்த தலைவரும் இதனை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குறியே.
ஆனால் நாட்டை பொறுப்பெடுக்க எவரும் முன்வராத நிலையில் ரணில் அதனை கையிலெடுத்து செயற்பட்டார் என கூறும் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
எதிர்கட்சிகளிடம் ஆலோசனை
சட்டத்தரணிகள் ஒன்றுகூடி கலந்தாலோசித்து அறிக்கை ஒன்றை தயாரித்து, இது தொடர்பில் எதிர்கட்சிகளிடம் ஆலோசனை பெறப்பட்டது.
இதற்கு இணைக்கப்படும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதன்போது, அவர் ஒருவருக்கும் சொல்லாமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
அவரது நீண்ட அரசியல் அனுபவத்தில் சிறிய சந்தர்ப்பத்தை கண்டுகொண்டார். அதற்கான கதவு திறக்கும்போது அதற்குள் காலை பதித்து பதவியை தக்கவைத்துக்கொண்டார்." என்றார்.