விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் மகிந்த பிரபலமடையவில்லை: சஞ்ஜீவ எதிரிமான்ன (Live)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மேற்கொள்வதற்கு எடுத்த தீர்மானம் பிரபலமாக இருந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த தீர்மானத்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைதியே மகிந்தவை பிரபலமாக்கியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (09.02.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகியபோது இலங்கையை காப்பாற்றுவதற்கு எவரும் முன்வரவில்லை.
மக்கள் விரும்பாத முடிவுகள்
எனவே முதுகொலும்புள்ள ஒருவராக ரணில் விக்ரமசிங்கவே நாட்டை காப்பாற்ற முன்வந்திருந்தார் என்பதை நான் பாராட்டுகின்றேன்.
மக்கள் விரும்பாத முடிவுகளை துணிந்து எடுக்கப்போவதாக ஜனாதிபதி, தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஜனாதிபதி தெரிவித்த இந்த விடயம் எவ்வளவு பெறுமதி வாய்ந்தது என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.





அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam
