இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் உரையாற்றிய ரணில்
காலநிலை மாற்றம் இலங்கைக்கும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஓமானில் நடந்த இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் உரையாற்றும்போது அவர் இதனை கூறியுள்ளார்.
பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய போதிலும், இலங்கை உட்பட இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளும் காலநிலை மாற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஓமான் கடற்படை
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஓமானும் இலங்கையும் இந்தியப் பெருங்கடல் நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.
ஓமான் கடற்படை போர்த்துகீசிய கடற்படையை தோற்கடித்தது.
அந்த நேரத்தில் இலங்கையில் கடற்படை இல்லை. நாங்கள் அவர்களை நிலத்தில் தோற்கடித்தோம். எங்களிடம் ஒரு ஆயுதப் படை இருந்தது.
தோல் கவசம் அணிந்த யானைகள், துப்பாக்கி ஏந்தியவர்கள் மற்றும் பீரங்கிகள் இந்தியாவிலிருந்து வந்தன” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
