வெளிநாட்டில் உள்ள வழக்கறிஞருக்காக காத்திருக்கும் ரணில்
வெளிநாட்டிலுள்ள தனது வழக்கறிஞர் நாடு திரும்பியதும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்யையை தொடர்ந்து, இந்த மாதம் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்று அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ரணிலின் அறிவிப்பு
கடந்த 17ஆம் திகதியும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் புத்தாண்டு விடுமுறை காரணமாக 17 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது வழக்கறிஞர் இன்னும் வெளிநாட்டில் இருக்கிறார்.
அவர் நாட்டை வந்தடைந்ததும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகும் திகதி குறித்து அறிவிப்பதாக ரணில் தெரிவித்துள்ளார்.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
