எட்கா உடன்படிக்கையை இறுதி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ரணில்
ஆடை ஏற்றுமதி உற்பத்திகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது என்பதுடன் அமெரிக்க சந்தை முன்னர் போல காணப்படாது. இந்நிலையில், இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையை அரசாங்கம் இறுதி செய்யவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை அமெரிக்காவின் புதிய வரிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை இறுதி செய்வது அவசியம்.
ஏற்கனவே உள்ளதை கைவிடாமல்
சிங்கப்பூர் தாய்லாந்துடன் செய்துகொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செயற்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
2025இற்கு முன்னர் அதனை இறுதி செய்யவேண்டும் என்பதே எனது எண்ணம்.
நாங்கள் அமெரிக்காவையும் ஏனைய நாடுகளையும் நம்பியிருந்தோம். ஆனால் அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகள் எவ்வாறு உள்ளன என்பதை நீங்கள் பார்க்கலாம்.
அமெரிக்க சந்தைகள் முன்னர் போல திறந்தவையாக காணப்படாது. ஐரோப்பாவுடன் என்ன நடக்கும் என்பது தெரியாது.
மேலும், புதிய வர்த்தக கொள்கைகள் நாட்டிற்கு அவசியம். ஆகவே ஏற்கனவே உள்ளதை கைவிடாமல் புதிய திசைகள் குறித்து ஆராயவேண்டும் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
